
கனவும் பன்றிகள்
ஆழ்ந்து ரசித்துத் திழைக்க
ஆழ்ந்து ரசித்துத் திழைக்க
மனம் இடம் கொடுக்கா
அருவருப்புகள் மிகுந்தவை பன்றிகள்
அவ்வாறு பார்க்கச் சகிக்கொணா
பவ்வியைச் சாப்பிடும் பன்றிகள் சிலதினை
எனது கண்ணாடி நதியில் நீராட
விருந்தாளியாக அழைத்துப் பார்க்கிறேன்
அவைகள் பிணவாடையடிக்கும்
சகதியை விட்டும் வெளிவருவதாக இல்லை
சேறும் சுரியமடர்ந்ந அவ்விடத்தை
சொர்க்கமென கருதி வாழ்கின்றன
தெவிட்டா அதன் வாசனையை
முகர்ந்து பேரின்பமுறுகின்றன
அது அவைகளின் பிறவிக் குணமாக இருக்கலாம்
இருந்தும் எல்லாவற்றையும் மீறி
அவைகளை வலுக்கட்டாயமாக சாய்த்து வந்து
நதியில் நீராட வைத்து பரிசுத்தமாக்கி
குருத்து மணல் பரப்பில்
பண்ணை அமைத்து பராமரிக்கிறேன்
பசும் புல்வெளியில் மேயவிடுகிறேன்
சொகுசு மீந்த வாழ்வை பரிசளிக்கிறேன்
எது எப்படி இருந்தாலும்
அவைகளின் அதியுச்சக் கனவு
ஆதியிலிருந்து சகதியாகத்தான் இருக்கிறது
இந்தப் பன்றிகளைப்போல்
நம்மிடையும் சிலர் வசிக்கத்தான் செய்கிறார்கள்
ஹயாவின் காவல் பொம்மை
அடை மழை ஓய்ந்து
இதமான காற்றும் வீசுகிறது
மதிய வெயில் குளிர்ந்து
சுள்ளென்று பெய்கிறது
வெளியில் அலாதியாக சென்றுவர
ஹயாவை அழைக்கிறேன்
அவள் தனது பொம்மைகளை
தனியாக விட்டுவர மறுத்து
அவைகளை தனதிரு புயங்களில்போட்டு
யாரும் பறிக்க முடியாது இறுகணைத்து
மூஞ்சை திருப்பியபடி நிற்கிறாள்
கடலலைகளில் கால் நனைத்து
அதன் முற்ற வெளியில் பட்டம்விட்டு
மிகவும் விருப்பமான
மஞ்சல் வர்ண பலூன் வாங்கி ஊதி
ஆகாயத்தில் பறக்கவிட்டு
சிறுவர் பூங்காவில்
விளையாடித் திழைத்த பின்னராக
குளிர்களி வாங்கி
ஒழுகொழுகச் சுவைக்காலாமென
நாக்கூறச் சொல்கிறேன்
உடன் தனது காட்டு பொம்மைகளை
உறங்கவைத்து விட்டு
அவைகளுக்கு காவலாக
உருவத்தி்ல் பெருதாகவிருந்த
கொம்பன் யானை
பொம்மையினை நிறுத்திவிட்டு
பட்டாம் பூச்சியென சிறகடித்துப் பறந்து வந்து
என் தோளில் அமர்கிறாள்
சிறியதாக தோற்றமளித்தாலும்
காட்டின் அரசன் சிங்கமென்பதனை
