
இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிலேயே சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாய்மொழி மூலம் வாக்கெடுப்பை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் அல்லது இலத்திரனியல் முறையில் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மோதல் இன்றி நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கும் சர்வகட்சி கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
