
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக வருகை தந்து இராகலை மேல் நகரதொகுதி சந்தியில் கூடியுள்ளனர்.

இதனையடுத்து, கூட்ட மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தவர்கள் சீ.பீ.ரத்னாயக்கவின் உரையை தொடர்ந்து கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பேரணியில் ஏந்தி வந்த சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.(ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)
