
பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வாக்காளர்கள் இணையம் மூலமாக இலக்கு வைக்கப்படக்கூடும் எனவும், பொய்யான செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்படக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக ரஷ்யா மேற்குலக நாடுகளின் சனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், கனேடிய தேர்தலிலும் அதன் கை நீளக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எமது மக்களுக்கு மேலும் விழிப்புணர்வினை ஊட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும், இவ்வாறான பொய்ச் செய்திகள் குறித்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும், இது போன்ற புனைக்கதைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கனடா மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில், சட்டம் – விதிமுறைகளுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக குரல் கெர்டுத்துவரும் நிலையில், அவ்வாறான நாடுகளால் கனடா இலக்கு வைக்கப்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
