
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காத காரணத்தினால், முழு நாடும் அழிந்து விட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை பேசி பயனில்லை. சிறிசேன துரிதமாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஜனாதிபதி தொடர்ந்தும் இப்படி இருந்தால், முழு நாடும் அழிந்து விடும். பெரும்பான்மை பலம் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும். எனது கருத்தை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஏற்றுக்கொள்ளாதது பற்றி எனக்கு தெரியாது. இது கட்சியல்ல முழு நாடும் அழிந்து விடும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் அழிந்து விடும். நாமும் அழிந்து விடுவோம். முழு நாட்டு மக்களும் அழிந்து விடுவார்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தை கவிழ்க்கும் வழிமுறைகள் உள்ளன. கூட்டாக எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.(ந)
(கிண்ணியா செய்தியாளர்)
