LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 23, 2018

நாவக்குடா கிழக்கு இரண்டாம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கை



கம்பெரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு நாவக்குடா கிழக்கு இரண்டாம் குறுக்கு  வீதியினை கொங்கிரீட் இடப்பட்டு  வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசனின் விசேட பணிப்புரையின் கீழ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக  20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வீதியினை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

வீதிக்கான கொங்கிரீட்  போடப்படுவதற்கான ஆரம்ப  நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் டி .பிரேம் ,மாநகர சபை உறுப்பினர்களான  டி .மதன் , பூபாலராஜா , நிஸ்கந்த ராஜா , ஸ்ரீரிஸ் காந்தராஜா   பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி .குமுதமலர் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் பி ..பிரசாந்தன்  மற்றும் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , ஸ்ரீ முருகன் ஆலய நிர்வாக பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்



  



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7