
விபத்து இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் நிலவிவரும் கடும் பனியுடனான காலநிலை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு பொலிஸார் கோரியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
