கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம், நில வரியை ரத்து செய்ய வேண்டும். இயற்கை சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழ் நாட்டை பேரிடர் மாநிலமாக அறிவித்து, மாநில அரசு கேட்கும் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வைகோ நாயுடு செய்தியா ளர்களிடம் கூறியது:
புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ.1,000 கோடியை அளித்திருப்பது ஆறுதல ளிக்கிறது. நிலைமையை முழுமை யாக சீரமைக்க ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். எதிர்க் கட்சிகள், மக்களை தூண்டிவிடுவதாக எண்ணக் கூடாது. குடிநீர், உணவு இல்லாமல் தவிக்கும் மக்களிடம் ஆதங்கம் ஏற்படுவது இயற்கை. மேலைநாடுகளில் கூட புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் வழங்க 10 நாட்கள் ஆகும் நிலை யில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டுள்ளது என்றார்.
