
லாரன்ஸ் அவென்யூ மேற்கு மற்றும் ஆலன் சாலை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ப்ளாஸ்மொஃபைல்ட் டிரைவில் ஒரு குடியிருப்புக்கு வெளிப்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர் குறித்த பகுதிக்கு சிறிது தூரம் தள்ளி பிறிதொரு குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 20 வயதுடையவர் என்றும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்தோடு விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 20 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்தில் காருடன் நின்றதாகவும், இருப்பினும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரொறன்ரோ பொலிஸார் மேலாதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
