குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விபரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாகத் திரட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது, கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக இடர் முகாமைத்துவப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது.
இதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும்” என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.