LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 3, 2020

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் – சவேந்திர சில்வா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்க்கும்
விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக பதவியேற்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (வியாழக்கிழமை) பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மெலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையினை செய்வோம் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த நிகழ்வு முப்படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் எம்.எ.எ டி ஶ்ரீநாகஇ போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்திரசேகரஇ இராணுவ செயலாளர் நாயகம் பி.ஜே. கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7