
முகமாக அம்மாநிலத்திற்கு மேலதிகமாக 10 ஆயிரம் மத்திய ஆயுதப் படை பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உட்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை ஆயுதப் படை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்காக, பல்வேறு முகாம்களில் இருந்து மத்திய ஆயுதப் படை பொலிஸார் 10 ஆயிரம் பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) விமானங்கள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும் காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜனாதிபதி ஆட்சி அமுலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை நடைபெற்றுவரும் நிலையில் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அம்மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை கண்காணித்து நிலைநாட்டுவது, பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் படைகளை அனுப்பிவைக்க மத்திய உட்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே, வெகு விரைவில் மேலும் 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய அரசு உட்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
