LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 7, 2019

மைத்திரியின் முடிவுக்காக காத்திருக்கும் ரணில் தரப்பு

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகின்றது.

ஏற்கனவே இதற்காக ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 6 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது.

ஆனால் இதுவரையும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பட்டியலில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித ரங்கேபண்டார மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயரும் சுதந்திர கட்சியின் A.H.M. பெளசி, லக்ஷ்மன் செனவிரத்ன, காமினி விஜயமுனி சொய்சா மற்றும் பியசேன கமகே ஆகியோரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாலித ரங்கேபண்டார மற்றும் விஜயமுனி சொய்சா தமக்கு இதுவரை அமைச்சரவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக 30 அமைச்சர்களை நியமனம் செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. ஆனால் தேசிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7