LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!

யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 13 வயதான சதீஸ்வரன் வினோத் மற்றும் 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளைநிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறுவர்களை பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்றதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா, சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்று வருகின்றனர்.

இதேவேளை, வீட்டிற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டபோதும், வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸாரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7