
சைவப்புலவர் திருமதி. சரோஜினிதேவி சிவஞானம் எமுதிய திருவாசகத்தில் சிவபுராணம் என்ற பக்தி நூல் வெளியீட்டு விழா 19-02-2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு சைவப்புலவர் த.உதயசங்கர் தலைமையில் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.

உதயசங்கர் தலைமையுரை வழங்குவதையும், கவிஞர், ஆசிரியர் ச.ஹோபிநாத் நெறியாக்கம் செய்வதையும், மூத்த எமுத்தாளர் திருமலை நவம் நூல்அறிமுகஉரை நிகழ்த்துவதையும், நூலின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதமகுரு பிரமஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களுக்கு வழங்கி வெளியீட்டு வைப்பதையும், அதிதிகளையும் படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்