LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 13, 2019

மூத்த எழுத்தாளர் மர்ஹ_ம் மருதூர்க்கனி எழுதிய நூல்களின் அறிமுக விழா


மருதமுனையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹ_ம் எஸ்.எல்.எம்.ஹனீபா மருதூர்க்கனி(லங்காதீப) அவர்கள் எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களின் அறிமுக விழா எதிர்வரும் 2019-02-24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூட மண்டபத்தில் எழுத்தாளர் மர்ஹ_ம் வி.எம்.இஸ்மாயில் மருதூர் கொத்தன் நினைவரங்கில் நடைபெறவுள்ளது.

கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவை மருதூர்க்கனி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.இங்கு மண் பூனைகளும் எலி பிடிக்கும்,அந்த மழை நாட்களுக்காக,மருதூர்க்கனியின் கவிதைகள், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்,சந்தணம் பெட்டகமும் கிலாபத் கப்லும் ஆகிய ஐந்து நூல்களுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இங்கு பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புரையாற்றவுள்ளார் எழுத்தாளர் உமா வரதராஜன்,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,பேராசிரியர் செ.யோகராசா,ஆய்வாளர் சிறாஜ் மசூர்,கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் ஆகியோர் நூல்கள் பற்றி உரையாற்றவுள்ளனர். மருதூர்க்கனி புதல்வி டொக்டர் வஜ்னா றபீக் ஏற்புரையும்,நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளார்

பி.எம்.எம்.ஏ.காதர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7