
வெனிசுவேலா எதிர்த்தரப்புத் தலைவர் குய்டோவுக்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அதன் மூலம் வெனிசுவேலாவின் தற்போதைய ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் குழப்பம் நிலவும் வெனிசுலாவுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், வெனிசுவேலா எதிர்த்தரப்புத் தலைவர் ஜூவான் குய்டோ நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவருடைய வங்கிக் கணக்குகளையும் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
கடந்த வாரம், வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குய்டோ தம்மை அறிவித்துக் கொண்டார். அதையடுத்து வெனிசுவேலாவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் சூழலில் உச்ச நீதிமன்றம் ஜூவான் குய்டோ மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவும், பிற நாடுகளும் ஜூவான் குய்டோவை ஆதரிக்கின்றன. இதேவேளை ரஷ்யா உட்பட சில முக்கிய நாடுகளுடன் ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோவுடன் நெருக்கமாக இருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.
